Type Here to Get Search Results !

கனவு

 சொல்லாத கனவு செல்லாமல் போனது

ஆணாகிய என் வயிற்றில் அம்மா சிசுவாய்.....


இதயத்தில் சுமப்பவனையே இடையிலும் சுமக்கும்

பெண்கள் இருப்பதாய் கண்ட கனவு...


கண்ணைத் திறந்து கடவுள் கண்டதாய் கண்ட கனவு..... கட்டமும் நட்டமும் இல்லாமல் இருப்பதாக கண்ட கனவு


கண்ணை மூடியதும் காணும் அவளென் கண் முன்னே நிற்பதாய் கண்ட கனவு...

சாதிக்கு இறுதிச்சடங்கு செய்து சமாதியானதாக கண்ட கனவு


பொழுதுபோக்கு பொழுதுபோக்கு என்று ஆயுள் பொழுதைப் போக்காமல் பொறுப்போடு இந்த சமுதாயம் நடந்து கொள்வதாக கண்ட கனவு......


வரும் உழவர் திருநாளில் உழவர்கள் எல்லாம் தன் உரிமையை அடைந்ததாக கண்ட கனவு......


சுரண்டிக்கொண்டு ஓடியவன் எல்லாம் திரண்டு வந்து தீர்ப்புக்குப் பின்

தண்டனை அடைந்து நீதியை தலைநிமிரச் செய்ததாக கண்ட கனவு


அதிகாரிகள் எல்லாம் கை கட்டாமல் கைக்கூலிகள் ஆகாமல்

அரசியல்வாதிகளை ஆட்டிப் படைப்பதாக  கண்ட கனவு....


ஓலைச்சுவடியில் எழுதி வைத்தால் ஒடிந்து போகும்...... ஒளிப்பதிவில் பதித்து வைத்தால் ஒலிக்கும்போது பிழையாகும்.... கணினியில் பதித்து வைத்தால் காணாமல் போகக்கூடும்

என என் பெயரை என் மூதாதையர் வழியில் கல்வெட்டில் பதித்து வைப்பதாக கண்ட கனவு......


சொல்லாது நான் கண்ட சொப்பனங்கள் அத்தனையும்...... சொல்லிவிட்டேன்

செல்லாமல் போகுமோ 

செல்லரித்து போகுமோ

கல்லாத நான் படைத்த என் கவி எனை கரை சேர்க்குமோ......


கண்ணயறப் போகிறேன்

கனவு கண்டு விட்டு சொல்கிறேன்

காத்திருங்கள்......


இவண்

ஆற்காடு க குமரன்

9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.