நம்புவதற்கு முன்பு பலமுறை சந்தேகம் கொள்ளுங்கள் நம்பிய பிறகு ஒரு முறை கூட சந்தேகம் கொள்ளாதீர்கள்
நம்பிக்கையின் ஆயுள் காலம் துரோகம் துளங்கும் வரையே..
நம்பிக்கை வைத்த பிறகு சந்தேகம் கொள்ளாதீர்கள் ஒருவேளை உங்கள் சந்தேகம் சரியெனில் நம்பிக்கை பொய்த்து போகும்
வைத்த நம்பிக்கை சரியெனில் கொண்ட சந்தேகம் உறவை கொன்று விடும்....
அடுத்தவர் மீது நம்பிக்கை வைத்து
அவநம்பிக்கையால் சந்தேகம் கொள்வதை விட தன்னம்பிக்கை கொள்ளுங்கள்
அது உங்களை தலை குப்புற தள்ளாது... தறிகெட்டும் செல்லாது
தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்திற்கும் தான் நூலிழை வித்தியாசம்...
என்னால் ஆகும் என்பது தன்னம்பிக்கை என்னால் மட்டுமே ஆகும் என்பது தலைக்கனம்....
தலைக்கணம் ஒருநாளும் தழைப்பதில்லை
தன்னம்பிக்கை ஒரு நாளும் தவறுவதில்லை...
சந்தேகம் மட்டும் வேண்டாம் சரியும் யாவும்... சந்தேகம் மட்டும் வேண்டாம் சங்கடங்கள் கூடும்
சந்தேகம் கொள்பவன் சந்தோசம் இழப்பான்...சந்தோசம் இழந்த பின் சகலமும் தோசம் என்று அலைவான்....
நம்பிக்கை கொண்டவன் மீது சந்தேகம் கொள்ளாதே நீ கொண்ட நம்பிக்கையும் செல்லாதே.....
தன்னம்பிக்கையை மட்டும் தளர விடாதே... தலை கீழே நின்றாலும் உன்னை உயர விடாதே...
நம்பிக்கை கொள்வது நம் குணம்
நம்பிக்கையை கொல்வது அவர்கள் குணம்..
இவண்
ஆற்காடு குமரன்
9789814114