பாட்டு எழுத சொன்னாங்க பணம் தரேன்னு சொன்னாங்க... வாய்ப்பு கிடைத்த சந்தோசத்துல வாய பிளந்து நின்னேங்க...
பேரம் பேச வழி இல்ல என் பேரு ஊருக்கும் தெரியல.., பேரும் புகழும்
கிடைச்சதால பேசின பணம் தரலீங்க....
அடுத்தடுத்து வாய்ப்பு தரேன்
அதையும் மறந்து போனாங்க...
விதையும் பாடல் யாவையும்
விண்ணை முட்டும் சொன்னாங்க...
காசோலை தந்து சிலரு கதவடைச்சு நின்னாங்க..காலந்தள்ளி திகதி இட்டு
காணாமல் தான் போனாங்க...
திகதி வந்த நேரம் திதி கொடுக்க வேண்டி காசோலையை கணக்கில் சேர்க்க வந்தேங்க...
விழுந்ததுமே எழுந்தது... எம்பி எம்பி குதித்தது... கணக்கில் காசு இல்லையின்னு காசோலை கதறுது
திரும்ப போய் நின்னாக்கா திரும்பி கூட பாக்கல... விருப்பமில்லை பணம் கொடுக்க விலகிப் போக சொன்னாங்க.....
உழைத்த காசு கிடைக்கல.. உடைந்து நான் போகல... எழுதி இன்னும் முடிக்கல.. ஆயுள் காலம் நீடிக்கல...
பிணி வந்து சேர்ந்தது.. பணி முடங்கி போனது.. விதி முடிந்து போனது...
சதி முடக்கல் ஆனது...
என் உடமை பாருங்க... ஏமாற்றங்கள் தானுங்க... என் உடலை பார்த்த பின்னும் எதிர்பார்ப்பு இன்னும் ஏனுங்க....
இருக்கும் வரை வாழுங்க இல்லைனா வாழ்க்கை ஏதுங்க... கெடுக்கும் எண்ணம் வேண்டாங்க... தடுக்கும் எண்ணம் வேண்டாங்க...
கொடுக்கும் ஆயுள் நாட்கள் வரை
கோவப்படாமல் வாழுங்க...
நா.முத்துகுமார்.. நா சொல்லாமல்
மறைத்ததை.. ஆற்காடு குமரன்
சொல்றேங்க....
வியர்வை உலரும் முன்னே கூலி கொடுக்க பாருங்க... ஏமாத்தி சேர்த்த எதுவும் உனக்கு துணை இல்லீங்க...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114