Type Here to Get Search Results !

பெண் சுதந்திரம்


 வானமே எல்லை

மானம் ஆவியாகி வானம் நோக்கி....


பெண் அடிமைக்கு எதிரான போராட்டங்கள்... பெண் அடிமை ஆகிறாளே.. அதுவே இங்கு வேரூட்டம்.....


ஆணுக்கு பெண் சரிநிகர் சமம் என்றான பின்னே அடிமைத்தனம் ஏது இங்கே....


கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகத்தை கொடுத்தார் பெரியார் 


அரைகுறையாய் படித்து விட்டு ஆணவத்தில் ஆடுகிறது...


வீரப் பெண்மணிகளாய் விளைந்தார்களாம் விவேகம் அற்று 


பெண் சுதந்திரத்தின் பேராபத்து வாடகைத் தாய் வசதி....


பெண்கள் நாட்டின் கண்கள்....

எல்லா பாவங்களையும் உள்ளடக்க வேண்டும்....


ஆசைக்கு விழிகளை விரித்து 

பார்வை வலை வீசி.. 


இமைகளை மூடாமலே இரவினில் கலந்து...பாவத்திற்கான பரிகாரமாய் கண்ணீரைச் சொரிகிறது....


ஆணுக்கு பெண் சரிநிகர் சமம் தான் ஆவணப்பட்டது குற்றங்களில் மட்டும் 


போதையின் பாதையில் கூட கைகோர்த்து நடக்கிறது...


அரைகுறை ஆடையோடு ஒரு ஆடவரை காட்டுங்கள்... கட்டழகு கட்டிடங்கள் சாளரத்தோடு...


ஆதாயம் காணாமல் பாதாள பயணம் இல்லை... செய்கூலி இல்லாமல் சேதாரம் வழியில்லை....


தன்னை அறிதலை காட்டிலும் உன்னை அறிதல் ஆர்வம் அதிகம் 


ஆங்கில வழிக் கல்விக்கு ஆர்வம் காட்டியது யார்... இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படும் பராரிகள் யார்....


நூற்றில் ஒரு விழுக்காடு... இன்னமும் பாரம்பரியம் போற்றுவதால் தான் 

தாய்மை இன்னும் நிலைக்கிறது....


தாய்மை எனும் வாய்மை இல்லாவிட்டால் அவள் பூசும் கண் 

மை கூட பொய்மை என்றே ஆகும் ...


பெண்ணிலிருந்து மண்ணினிர்க்கு வந்தவன் தான்.. கண்ணிருந்தும் குருடனாக கடந்து செல்ல இயலவில்லை....


மக்களைப் பெற்ற மகராசிகளே மனதில் கொஞ்சம் இறுத்துங்கள்

உங்கள் பிள்ளைகள் தானே சமூகத்தின் பிம்பங்கள்....


வழிகாட்டிகள் நீங்களே வழிதவறிப் போனால்... முறை தவறி போகும் அடுத்து வரும் மூன்று தலைமுறையும்


ஒழுக்கத்துடன் கூடிய சுதந்திரம் இழுக்கத்தை தருவதில்லை..

ஒப்பிட்டு காணும் எதுவும் 

உயர்வை தருவதில்லை....


இவண் 

ஆற்காடு குமரன் 

9789814114

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. அருமை ஆனால்
    வலி நிறைந்தவள்
    வழி அறியாதவள்...

    ReplyDelete