மச்சம் ஒன்றை முன்னிறுத்தி அச்சம் தன்னை விளை வித்தவனே..
திசுக்களின் எச்சம் அறிவீரா
புகாவொளி புள்ளி உணர்வீரா...
மச்சத்திலும் பல வகைகள் தோல் நோயின் அறிகுறிகள்...
கருமை நிறக் கண்ணனுக்கு உடல் எல்லாம் மச்சமோ... தோழியர் புடை சூழ தோன்றியது மிச்சமோ....
எழுத்தாளும் வித்தகனே.. எனையாண்டது சத்தியமே..
குழந்தையும் கடவுளும் ஒன்றுதான்
குறும்புகள் யாவும் நன்று தான்
குழவியும் கிழவியும் ஒன்று தான்
குழந்தையா காளை நீ இன்று தான்
கவனத்தில் கொள்ள நன்று தான்
ஆயுத எழுத்தாம்... ஆயத்தமாகிறேன் ஆயுதத்தோடு... அடிக்கிற கைதான் அணைக்கும் அறிவீரோ...
கணப்பொழுது போதும் பிழற உணர்வீரோ... நம்பிக்கை இல்லையா என்றாய்.....
நதி மீது நம்பிக்கை இருக்கிறது
நடுவில் குளம் நம்பிக்கை இல்லை....
நீயோ தேங்கி விடுவாய் நானோ ஏங்கி விடுவேன்.. தாபத்தில் நான் தவிக்க வேண்டும்.. உன் தாக்கத்தை நான் தவிர்க்க வேண்டும்...
மறைக்காமல் முன்மொழிவதால்
உன் செய்கைகள் சரியல்ல... பட்டவர்த்தனமாய் உரைப்பதால்
பரிவர்த்தனைகளும் முறையல்ல...
என்னை வதைக்காமல் சிதைக்கிறாய்.. நீ வல்லவன் தான்....
என்னை நினைக்காமல் நீ இல்லை நல்லவன் தான்....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114