ஆறுதலை தேடி அலையாதே ஆளுமைக்குள்ளாவாய்.. அன்புக்கு ஏங்காதே அடிமையாகி விடுவாய்
எவனையும் நம்பி விடாதே இறுதியில் வெம்பி போவாய் ... காரணம் இன்றி ஏதும் நிகழ்வதில்லை காரியம் இன்றி எவனும் காலை பிடிப்பதில்லை....
நீ அதிசயத்து காண்பதை அறிந்தால் அலட்சியமாக உன்னை காணும் உன் நிழலும் கூட....
காலத்தை நீ விட்டு விட்டாலும் காலம் உன்னை விட்டு விடுவதில்லை ....
காலக் கணக்கீடு கையாள்வதில்
கையாடல் காலக்கேடு.....
முயற்சி உன்னில் இருந்தால் பயிற்சி தன்னால் வரும்.... வளர்ச்சி தளர்ச்சி மறுசுழற்சி.. சமமென ஏற்க மனமலர்ச்சி..
உயர்ந்தவன் தாழ்ந்தவன் உனக்கும் இல்லை உலகத்திலும் இல்லை...
ஆறு விரல் இருந்தால் அகம் மகிழ்கிறாய் ஒரு விரல் குறைந்தால் முடமென்கிறாய்
பொறுப்பினை உணர்ந்தால் போதும் உறுப்புகள் தேவையில்லை சிறப்புறவே..
ஐந்தறிவுகளுக்கு ஐயமில்லை
ஆய்ந்தறியும் அறிவிருந்தும் ஆறறிவுக்கு ஆர்வமில்லை.....
இளைப்பாற நிழல் தேடும் உனக்கு மரம் நடும் மனம் இல்லை....
பசியாற நினைக்கும் எவனுக்கும் பயிர் வைக்க மனமில்லை...
ஊண் உண்ணும் எவனுக்கும் உயிர் வலி உணர்வதில்லை....
சாண் வயிறு நினைவில்லை
நாவின் ருசி குறைவில்லை
உன்னை நீ நம்பு
உனக்கதுவே தெம்பு
ஒப்புமை காண வம்பு
யாரோ எய்யும் அம்பு....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114