கோவில் கட்டிய கூமுட்டைகளே இன்று குத்துது குடையுது என்றால் என்ன செய்ய...
உணவுக்கு (இட்லி)பெயரிட்டு உள்ளே தள்ளும் போது புரியவில்லையா கழிவென வெளிவரும்...என்று
ஆரவாரித்து ஆராதித்து
ஆளாக்கியதற்கான ஆதாயம்
ஆதாரம்...இழி சொல்....
சுழற்க்கோப்பை
தானே இவளின் நிலை
சுழலும் வரை தீராது அவல நிலை
போகாத இடம் உண்டா நீ சொல்லு
போக்கிடம் நிலை உண்டா நீ சொல்லு
சேராத இடம் உண்டா நீ சொல்லு சேருமிடம் சிறக்குமா நீ சொல்லு
பன்மொழி படித்தவள் நீ என்றால்.. உன் மொழி ரசித்தவன் தான் அன்றோ...
இழித்துரைத்து மொழி மாற்றி பழித்தவளே...
வழி துணையாய் வந்த தமிழினத்தை மறந்தவளே...
பொழப்புக்கு பேசினாலும் பொறுப்பாக பேசிடு...
நிலை என்பது நிலையற்றது
நினைவில் கொண்டு நடந்திடு
திரையில் இருந்தாலும் தரையில் இருந்தாலும் ரசிப்போம்....
தீவினை என்றால் இரண்டையும் ஒழிப்போம்....
சர்ச்சைகள் தான் இங்கு சமூக சீர்கேடு....
சொல்லிக் கொடுத்து நடிப்பது திரைப்படம்...
சுய புத்தியுடன் நடப்பது அரசியல் களம்.....
இரண்டிலும் காலூன்றினால் ஏது பலம்....
மொழியறிவு அற்றவளா..அறியா மொழியில் உன் அளப்பறை...
பிரெஞ்சிலா பிறந்தாய் நீ...
எண்ணியதை எடுத்துரைத்து
பழித்து விட்டு..சப்பைக்கட்டு கட்டுகிறாய் சமாளிக்க பார்க்கிறாய்
இருக்கும் இடம் சரியில்லை....
இழித்தது முறையில்லை
நடந்தவை நன்மைக்கே....
இன்றாவது உணரட்டும்
இவ்வளவே நீ என்றே....
நடிகனை தலைவனாக பார்த்து நடுத்தெருவில் நின்றது போதும்
நல்லவன் எவனென்று
நாடிபிடித்து பார்த்தது போதும் ...
வந்தவன் யாவரும்
தமிழை வளர்பதாக
சொல்லி தன் தலைமுறையை
வளர்த்தவன்....தானே
பிள்ளை இல்லா வீட்டில் கிழவன் துள்ளி குதித்த கதை.. ஒன்றுக்கும் உதவாமல் போனது ஒன்றுமில்லாமல் ஆனது....
தெளியட்டும் இனியாவது
தமிழினம்....செழிக்கட்டும்
தலைமுறையின் மனித மனம்....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114