நிலைமை சரியில்லை என்றால் நிழலும் பயமுறுத்தும்....
பார்வையில் பிழை இருந்தால்
பாதை தடுமாறும்....
மனம் ஒரு நிலையற்ற போது எந்நிலையிலும் சினம் தோன்றும்
எதிர்கொள்ள துணிவிருந்தால் எல்லாம் தணிந்து போகும்....
எதிர்காலம் பற்றிய பயம் இருந்தால் நிகழ்காலம் கவனம் கூடும்
முக்காலமும் உணர்ந்தவனுக்கு எக்காலமும் சமநிலை ஆகும்
எதிர்பார்ப்பு அற்றவனுக்கு
என்றும் சலனம் இல்லை
ஏமாற்றி பிழைப்பவருக்கு என்றும் மாற்றமில்லை...
தனக்கேற்ற படி பிறரை மாற்ற முயல்பவருக்கு ஏமாற்றம் தவிர்க்க முடியாதது
யாரையும் மாற்ற முடியாது உன்னை நீ மாற்றிக் கொள்ளாமல் எதுவும் இயலாதே....
முடியாத காரியம் இயலாதே... இயலாத எதுவும் கிடையாதே...
எதையும் தள்ளி வைத்துப் பார்
உனக்கு கொள்ளி வைக்காமல் விடும்
நிதானம் கொள் நிதர்சனம் புரியும்
மூலமாய் இரு மூடனாய் இருக்காதே
நிர்மூலமாய் இரு நிலைத்து நிற்பாயே...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114