நான் தவிர்க்கப்படும் இடங்களில் இருந்து தான் துளிர்க்கிறேன்
என்னை அலட்சியப்படுத்தும் இடங்களில் இருந்து தான் எனது லட்சியம் துவங்குகிறது
இன்று நான் சந்திக்கும் அவமானங்கள் தான் நாளை எனக்கான வெகுமானங்கள்
வேண்டாம் என்று என்னை வீசியவர்களை வேண்டும் என்று நான் அண்டுவதில்லை...
வேண்டாம் என்கிற காரணமறிந்து விலக்கி வைக்கிறேன் வேண்டும் நான் மீண்டும் என தூண்ட செய்கிறேன் ....
இன்று நான் சந்திக்கும் அவமானங்கள் தான் நாளை எனக்கான வெகுமானங்கள்
உதாசீனங்களை கண்டு சினம் கொள்வதில்லை இனங்கண்டு நகர்ந்து கொள்கிறேன்.,.. உதாசீனப்படுத்தியவனே சினம் கொள்ள
என்னை அழிக்க முயல் பவர்களுக்கு என்னை அழிக்கும் எளிய வழியை நானே சொல்கிறேன்....
அழிக்க வந்தவன் ஆழ்ந்து யோசிப்பான் என்னை பற்றி யாரடா இவன் என்று...
என்னை விலக்கி வைப்பவர்களையே
என் இலக்காக கொள்கிறேன்...
நான் அடைவதற்கு அல்ல எனக்குள் அடவுவதற்கு....
தூற்றுவோர் போற்றுவோர் பற்றிய கவலை இல்லை...என்னை மாற்றுவோர் என்னைத் தவிர வேறு யாருமில்லை.....
தாழ்வாக பிறரை எண்ணுவதில்லை ஆக நான் தாழ்ந்து போவதில்லை
எவரையும் நான் அண்ணாந்து பார்ப்பதில்லை ஆழ்ந்து சிந்திக்கிறேன்...
இணை என எவரையும் நினைப்பதில்லை... நிகரென கொள்வது எனக்கு நானே....சிதறாது நாளும் சிறப்புறத்தானே
இவண்
ஆற்காடு குமரன்
9789814114