உன்னை நீ இழக்காத வரை
உயர்வு நிச்சயம்.......
எவ்வளவு தூரம் நடந்து கடந்து வந்திருப்போம் ஆனால் நம் கால்களில் இல்லையே......
உணவுக்கு அடிமையானவன்
ரோகி ஆகிறான்
உணர்வுக்கு அடிமையானவன்
துரோகி ஆகிறான்
உறவுக்கு அடிமையானவன்
தியாகி ஆகிறான்
உண்மைக்கு அடிமையானவன்
தீர்ந்து போகிறான்..
உடலுக்கு அடிமையானவன்
மோகி ஆகிறான்
உள்ளத்துக்கு அடிமையானவன்
யோகி ஆகிறான்....
தன்னைத்தான் உணர்ந்தவன் தடுமாறுவது இல்லை
மற்றவரை உணர்ந்தவன்
தடுமாறாமல் இல்லை......
நம்மை நாம் உணர்வோம்
பிறரை உணர்ந்து பிறருக்காக உருகி
பிரிவினில் துயர் கொண்டு
நடைபிணமாக வாழ்வதுண்டு
பிரியமானவர்கள் காணவில்லை என்று
பிரியமுடன் வந்து நலம் விசாரிக்கும் கண்ணீர்......
யாரையும் ஆழ்மனதில் பதிக்காதீர் ஆழ்குழாய் கிணறு போல கண்ணீர் ஊற்றெடுக்கும்....
எல்லாம் சில காலம்..... என்பதே நிலையாகும்.....
பண்படுதல் கலையாகும்....
புண்படுதல் கலைந்தோடும்.....
வடுக்கள் சின்னங்கள் அல்ல...... வந்து போனவர்கள் மீது நீங்கள் வைத்த எண்ணங்கள்......
காயங்கள் எதற்கு வடுக்களும் எதற்கு
மாயங்கள் எல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் தடங்கள் மட்டும்
கண்ணீரில் படம் போட்டு காட்டும்
உயிர்களிடத்தில் அன்பு வையுங்கள்
இயற்கையை இதயத்தில் வையுங்கள்
நிதமும் வரும் நிலவு கூட ஒருநாள் வராமல் போகும்..... நிலையில்லா மனிதர்கள் மட்டும் எப்படி துணையாய் வரக்கூடும்........
காயப்படும் முன்னே மாயம் என்று உணருங்கள்..... சாயம் போகும் முன்னே வர்ணம் என்று உணருங்கள்
அரிதாரம் பூச்சும் வேண்டாம்
அலங்கார பேச்சும் வேண்டாம்
யாக்கை தீரும் யாவும் மாயும்
மேவும் எல்லாம் தீர்ந்தே போகும்
தேர்வும் நீயே தீர்வும் நீயே
யாவும் உணர்ந்திடு
ஞானம் பிறந்திடும்
ஞாலம் உணர்ந்திடும்.....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114