கண்களே தேவையில்லை
உன் பெயர் எழுத......
கண்ணீரும் ஓயவில்லை
உன் பெயரெழுத......
உன் பெயரை யாராவது அழைத்தால் கூட ஒப்புக் கொள்ள முடியவில்லை
திரும்பி பார்க்கிறேன் தீராத கோபத்தில்
என்னை தவிர உன் பெயரை எவன் உச்சரிப்பதென்று
உன் பெயரை தனியாகப் பார்த்தால் தன்னிறைவு அடைகிறேன் வேறு பெயரோடு சேர்த்து பார்த்தால் வேதனையில் துடிக்கிறேன்
அப்பன் பெயரோடு சேர்த்து பார்த்தாலும் அடி வயிறு எரிகிறது
என் பெயரோடு சேர்த்து எழுதுகையில் ஏக்கம் தணிகிறது....
பெயரிடவும் ஒரு சட்டம் இயற்ற வேண்டும்..... இனியவளின் பெயரை
ஈரேழு உலகத்திலும் இனி எவளுக்கும் சூட்டக்கூடாது.......
நிலையற்றது பெயர் தான் என்றாலும் எனக்குள் நிலையாய் இருப்பதால் நீதி வேண்டும் நின் பெயருக்கு மட்டும்
உரிமையற்றவன் எவனும் அவள் பெயரை உச்சரிக்க எண்ணி உதட்டை கூட அசைக்க கூடாது.....
உள்ளத்தில் கூட அசை போடக் போடக்கூடாது...... பள்ளத்தில்
புதைத்தாலும் உயிர்த்தெழுந்து
உதைக்கூடும் நான்
சில நேரங்களில் எழுதிப் பார்க்கவே தேவையில்லை சிரசில்
சித்திரம் நின் பெயர்
நான் சிதையான பின்னும்
சிதையாமல் இருப்பதால்........
அப்படி என்ன இருக்கிறது அவள் பெயரில்...... நான் நானே இருக்கிறேன்
அவள் பெயரில் மட்டுமல்ல அவளில்
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114