நம்பிக்கை இருக்கிறது எனில் என் எழுத்துக்கள் நாளும் செய்யும் நாளை வெல்லும்....
மரபணுவில் மகரந்தமாக மனம் விழையும் மக்கள் கூட்டம்......
செல்களிலே சேர்ந்து செழிப்பாக
சேடியென நாடும்
என் வார்த்தைகள் வசியம் செய்யும்
என் கவிதைகள் காலத்தை வெல்லும்
என் மொழி நடை உன் வழியின் தடையை கொல்லும்.....
வார்த்தைகளின் தேடிப் போவதில்லை நான் எனக்குள்ளே வார்க்கப்பட்டிருக்கிறது
மொழியை தேடிப் போவதில்லை எனக்குள்ளே புதைக்கப்பட்டிருக்கிறது.....
வாசிக்கும் பழக்கம் இல்லை எனக்கு
என் மொழியை சுவாசிப்பதால் ....
ஆத்மார்த்தமாக எழுதுகிறேன் ஆத்மார்த்தமாக வாசிக்கிறீர்கள் இதில் என்ன ஆச்சரியம்.....
உன் செயல் எப்படி இருக்கிறதோ அப்படியே விளைவும்
பிரதிபலன் பாராமல் செயல்படுங்கள்
பிரதிபலிக்கும் நீங்களே எதிர்பாராத நேரத்தில்........
எல்லோருமே ஒரு வகையில் பிரதிபலிப்பான்கள் உள்வாங்கும் ஒளியைக் கொண்டு பிரதிபலிப்பவர்களே.......
ஒளியின் கதிரின் உளியில்
உடைந்து போனவர்களும் உண்டு
ஒளியின் அருமை தெரியாமல் இருட்டில் தவிப்பவர்களுக்கு வாசிப்பு ஒரு வரம்
வசியம் செய்வது வார்த்தையின் தரம்
வகைப்படுத்துவது மொழியின் உரம்
மிகையில்லை கவிதை விதை தான்
கதையல்ல இது நிசம்
எழுதுகோல் பிடித்து எழுதினால் கூட பரவாயில்லை காற்றலையில் அல்லவா எழுகிறேன் என் சுவாசக் காற்றலை கொண்டு
சுவாசித்து பார் சுகம் கிடைக்கும்.... வாசித்துப் பார் வளம் பெருகும்....
நேசித்து பார் திடம் ஆகும் எனக்குள்
வசித்து பார் மடமை தீரும்......
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114