யார் யாரை நம்பி ஏமார்ந்தது... ...?
ஏமாற்றி விட்டார்கள் என்பதை விட ஏமார்ந்துவிட்டேன் என்று ஒப்புக் கொள்வது மேலானது....
காலம் நம்மை ஏமாற்றி விட்டது என்று காரணம் சொல்ல முடியவில்லை.....
நம் கையாலாகாத தனம் நம்மை ஏமாற்றி விட்டது.....
காயம் பெரிதாக தோன்றும் போது காலம் பெரிதாகத் தோன்றவில்லை... காயம் மாயமாகும் போது கடந்தகாலம் திரும்பவில்லை....
நிகழ்வுகள் எல்லாம் நினைவாகி போனால் பரவாயில்லை கனவுகளே நினைவாக போகிறது
கனவுகளும் கலைந்து போனால் பரவாயில்லை உறக்கம் அல்லவா தொலைந்து போகிறது....
ஒருவரை ஒருவர் பிடித்து போகிறது காலம் மற்றவரோடு கட்டிப்போடுகிறது
விழித்துக் கொள்ள வேண்டிய நேரத்தில் முழித்துக் கொள்ளவில்லை....
வேலை நேரத்தில் உறங்கி விட்டு ஓய்வு நேரத்தில் விழித்திருந்து என்ன பயன்
விரையம் என்னவோ விழி நீர் மட்டுமே
என் நிழலைக் கூட நான் நம்பவில்லை அது ஒளிக்கு பயந்து ஒளிந்து கொள்ளும்.......
என் புறத்தை கூட நான் நம்புவதில்லை அது பெருக்கும் சிறுக்கும் காலத்திற்கேற்ப...
என் அகத்தை மட்டும் நம்புவதால் அகந்தை பிடித்தவன் என்று நீங்கள் நினைக்கக் கூடும்....
எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை... நான் என்பது நான் மட்டுமே
நம்பி ஏமாறுவதும் இல்லை
நம்பியவரை ஏமாற்றுவதும் இல்லை
ஏமாற்றி விட்டார்கள் என்பதை விட ஏமார்ந்துவிட்டேன் என்று ஒப்புக் கொள்ளுதல் அடுத்து வரும் ஏமாற்றத்திற்கான எச்சரிக்கை.....
விழித்திரு விலை போகாதிரு
நிலையாக இரு நிலையற்ற உலகில்
நீ நீச்சம் ஆகும் வரை......
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114