அடுத்தவரை அறிந்துகொள்ள துடிக்காதே....
அகத்தை அறிந்து கொள்....
அகந்தை அழிந்து போகும்
பிறந்து வளர்ந்து வாழ்ந்து
இறந்து போவதல்ல பிறவி
உன் இழப்பை இறப்பை உணராமல் இருக்கச் செய்வதே பிறவி........
பிறவா வரம் வேண்டும் என்றால்
இறவா வரம் வேண்டும்.....
பிரியா வரம் வேண்டும் என்றால் பிணையா வரம் வேண்டும்
மொத்தத்தில் ஆறறிவு அறிவியல் சொல்கிறது என் சித்தத்தில்
அறிந்ததை சொல்கிறேன்
ஆறு அறிவையும் சுமக்கும் இந்த மண் ஏழாம் அறிவு...
கூரையான இந்த வானம் எட்டாம் அறிவு
காற்றும் நீரும் ஒன்பதாம் அறிவு
காற்றும் நீரும் வேறல்ல
குளிர்ந்த காற்றே கொட்டும் மழை
காலம் பத்தாம் அறிவு
காலாவதி என்பது பொத்தாம் பொதுவு
அடுத்தவரை அறிந்து
கொள்ள துடிக்காதே....
அகத்தை அறிந்து கொள்....
அழிவில்லை நிதர்சனம்...
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114