எதை கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு....
சித்தாந்தம் நன்றாகத்தான் இருக்கிறது...
வேதாந்தம் நன்றாக புரிகிறது....
வேறென்ன இதில் ஆனந்தம்.... வாழ்வியல் நெறிமுறைகள் இல்லை... அறவழி விளக்கங்கள் இல்லை...
வஞ்சகமும் சூழ்ச்சியும் நெஞ்சகம் கொண்ட கதைகள்
என் வள்ளுவனும் அகத்தியனும்
வழிமொழிந்ததை நினைத்துப் பார்
விழிகள் விரியும்
மொழிகள் புரியும்
வழிகள் தெரியும்
பழிகள் விலகும்
அறத்துப்பால்
இன்பத்துப்பால்
காமத்துப்பால்
ஆண்பால் பெண்பால் பலவின்பால்
முப்பாலுக்கும் சமமாகும் முன்மொழிந்தது எல்லாம்
உன்பால் உணர்ந்து நீ
தமிழ் பால் பருகி விடு
அமிழ்தினும் இனியது
அறம் கொண்ட திருக்குறள்
வாசிப்பது தவறு அல்ல வாசிப்பவை
உனக்குள் வசிக்க வேண்டும் அவற்றை சுவாசித்து நீ வசப்பட வேண்டும்... வசப்பட்ட நீ வாசம் வீச வேண்டும்........
கீதையை குறை கூறவில்லை நான்
என் வள்ளுவனின் மறை போல் நிறை இல்லை என்கிறேன்
நெற்றிக்கண் திறப்பினும்
குற்றம் குற்றமே.....
நக்கீரன் வழிவந்தவன்....
அகத்தியனின் அவதாரம்....
ஔவையின் அரிதாரம்....
சிந்தித்து வாசி
புத்தகம் என்பது
மதம் சார்ந்ததல்ல
மனிதம் சார்ந்தது......
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114