சுவாச காற்றை பரிமாறி கொண்டோம்
சுகந்த வாசம் பகிர்ந்து உண்டோம்
பேரழகின் தாக்கம் பெருமூச்சு ஆக்கம்
ஈரிதழின் வரிகளில்
எத்தனை சீர்கள்
நாசியின் விளிம்பு
தலைகீழ் வினாக்குறி
விடையளிக்க விரித்திடு இதழ் தனை
கன்னக்குழி தனில்
நாண குவியல்
புன்னகை பூவிதழ்
தேனூறும் நா
புணர்ச்சி மிகுதி
உணர்ச்சி ஆகுதி
முத்தமிட வா
மொத்தமாய் தா
சத்தமின்றி நாமும் சங்கமிப்போம் நாளும்....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114