விடியல் தேடி இமைகள் திறந்தேன்
திறந்தயிமை வழி ஒளியினை நுகர்ந்தேன்
நுகர்ந்த ஒளியினால் இருளும் தகர்ந்தது
தகர்ந்து நகர்ந்திட பாதை தெரிந்தது
தெரிந்த தடத்தினில் பாதம் பதித்தேன்
பதித்து தொடர பயணம் தொடர்ந்தது
தொடர்ந்து நடக்க பாதை தோன்றிட
தோன்றிய தடத்தில் பிறரும் தொடர
தொடர்ந்து வந்து மிரட்டும் நிழல்
நிழலை விரட்ட வந்த விடியல்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114