தன்னலமற்றவள் தாய்
தன்னலம் உள்ளவள் பேய்
தாயா.......? பேயா........?
சொல்லி காட்டுபவள் தாய்
கொள்ளி வைத்த பின்னே உணர வைத்தவர் தந்தை
அழுது ஆர்பாட்டம் செய்பவள் தாய்........... நான் அழுவதை காண சகியாமல் அடக்கமானவர் தந்தை.....
பத்து மாதம் சுமந்ததை பாடை வரை சொல்லி காட்டுபவள் தாய்.......
ஆயுள் முழுதும் உழைத்தாலும்
அமைதி காத்தவர் தந்தை....
சீற்றத்திற்கு சிலநேரம் ஆயுள்.......அப்பா
புலம்பல் புதைவதே இல்லை கடைசிவரை அம்மா.....
எதை விதைக்கிறோமோ அதுவே முளைக்கிறது
மாமியாரை தாயாய் மதியாத மருமகள் தன் மருமகளை மகளாக நினைக்கத் துவங்கும் போது....... மாமியாரை தாயாக மதிக்காத மருமகளே வாய்க்கிறாள்.........
எச்சில் சோறு இட்ட நீயே எச்சில் சோறு உண்ணும் காலம்...........
அப்பா பாவம் செய்வதில்லை புண்ணியம் தேடி கோவில் கோவிலாய் அலைய.......
அப்பா ஆகாயம் அளவு ஆசைப்படுவதில்லை ஆண்டவனை சுற்றி வர....
எல்லையில் நிற்கும் போர் வீரனுக்கு கூட ஒரு நாள் ஓய்வு உண்டு.........
தாயின் கை பக்குவம் எல்லோருக்கும் வரும் அவள் பக்குவப் படாமல் இருந்தால்...
முன்னிலைப் படுத்திக் கொள்ள முனைந்து
பின்னிலையில் புலம்புவள் பெண்..........
பெயரளவில் குடும்பத்தலைவர் என்றாலும்
முன்னிலைப் படுத்திக் கொள்ள முனைவதில்லை அப்பா.........
வயிற்றைக் கிழித்துக் கொண்டு பெற்றதை வாய்கிழிய சொல்லிக் காட்டுவாள்..........
அவரையே அர்ப்பணித்தாலும் அமைதி காப்பவர் அப்பா.....
கண்டிப்புடன் இருப்பவர் அப்பா......
தன்னை தண்டிக்கும் சமுதாயம் உன்னையும் தண்டிக்கக் கூடாது என்று......
படிக்கச் சொல்லி நச்சரிப்பார்
படிக்காமல் தான் படும் பாடுகளை எண்ணி.....
தோல்வியுற்றால் தொடப்பக்கட்டை எடுப்பவள் அம்மா........
தோல்வியுற்றவனை தோழனாக பாவித்து தோளோடு அரவணைப்பவர் அப்பா.........
ஆடம்பரத்திற்கு அடங்கிப் போகும் அம்மாவின் ஆங்காரத்திற்கு ஆகாரமானவர் அப்பா....
இருக்கும்போதுதான்
நகைநட்டு வித்தான்.....
போகும்போதும் பூவையும் பொட்டையும் அல்லவா கெடுத்தான்.......
கடைசி வரை புலம்பிக்கொண்டே
விழி நீரால் முகத்தை அலம்பிக் கொண்டே.....
பெண்..........?
கடைசிவரை கேள்வி குறி
ஆண்.......
ஆயுள் முழுதும் ஆச்சரியக்குறி....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114