ஆருடனிடம் செல்லாமல்
நாள் நட்சத்திரம்
பார்க்காமல் அடிக்கல் நாட்டு விழா
என் கல்லறை......
நான் அறியாமல் எனக்காக கட்டப்படும்
வசந்த மாளிகை
தனிமையில் இருப்பதில்லை நான் எண்ணங்கள் துணையாகும்
பச்சை ஓலையுடன் சேர்த்து புதையுங்கள்
எழுதப் பிறந்தவன் நான்
என்றாவது ஒருநாள் அகழ்வாராய்ச்சியில்
அகப்படக் கூடும் ஓலைச்சுவடிகளாய்......
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114