காந்தியை கண்களில் காணவே
காலம் முழுதும்
கண்களில் ஏக்கம்......
காணாததால் கண்ணீர் தேக்கம்
கைகளில் தொடாததால் தொலைந்தது தூக்கம்.......
கைகளில் தொட்ட பின்
காந்தி கண்ணை மறைகிறார்.....
செல்வந்தச் செருக்கு.....
அவர் தேசத்தந்தையோ இல்லையோ தேவையான தந்தை.......
துதிபாடும் சதியோடும்
மதி மயக்கும்
மனிதமிழக்கும்....
மயானம் சேர்ந்தாலும் தியானம் கொள்கிறேன் காந்தியே உன்னை களவாட.......
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114