அழக்கூட துணிவதில்லை நான்......
துடைத்திடும் அன்புக்கரங்கள் அருகில் இல்லை........
அப்படியும் சிந்திய நீர்த்துளிகளின் சுவை
உப்பாய்.....
உறவுகளின் வியர்வைத் துளிகள்......
தலையணைகள் தனித்தனியாக.....
இமைகள் உறங்கவில்லை
விழி நீரில் நனைந்திருக்க
பிடித்த கையில்
படிந்த ரேகை
அழியவில்லை
கரங்கள் துண்டிக்கப்பட்டன...
எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்த எனக்கே ஏமாற்றத்தை கற்றுக்கொடுத்த உறவுகள்
பிணக்கில் பிரிவில் இருந்த உறவுகள் எல்லாம்
சுணங்கிய என்னைச்
சுற்றிப் பார்த்தன.......
சுவாசம் அடங்கவில்லை...
சுடுகாடு தேவையில்லை
சுற்றங்களுக்கு சொல்ல வேண்டாம்
சுதாரித்துக் கொண்டு விலகுகின்றன......,.
என் இறுதித்துடிப்பில் இமைகள் நனைகின்றன
இமைக்குள்ளே இருப்பு இருக்கிறது இன்னமும் ஈரம்
இழப்பின் பாரம்..........
வாலாட்டும் நாயாக
கரையும் காகமாக
அன்புக்கு ஏங்கி
அல்லல் படும் ஆன்மா.....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114