பிணம் என்ற பெயர் எப்படி பிரிக்க முடியாது புதைகிறதோ
அப்படியே அனாதை என்ற அடைமொழியும்.......
உறவுகள் இருந்தும் அனாதை.....
உயிரிருந்தும் பிணம்....
என் இரு கைகளும் இருக்கின்றன
இயல்பின்றி.........
வலக்கையை தலையணையாய் வாழ்ந்தவன்....
இடக் கையை இழுத்துப் பிடித்து முகர்ந்தவன்......
இடைவெளி.....
தலைக்கு மேல் வளர்ந்ததால் தனித்திருக்க.....
என் இரு கைகளும் ஓய்வெடுக்கின்றன ஒதுக்கப்பட்டதால்........
கைபிடித்து வளர்ந்த மழலை
கை கொடுக்க மறுக்கிறது...
வாயார அழைத்த உறவுகள்
வாய்மூடி கிடக்கிறது....
புதையாமல் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் பிணம் நான்........
என் முகவரிகளே என்னை அகதியாக்கின........
தனிமை......... தொடரும்
இனிமையான நினைவுகளை எண்ணியபடி
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114