புரிதலின்றி ஆயுள் முழுவதும் வாழ்வதைவிட
புரிதலோடு ஒரு நாள் வாழ்வதே பிறவிப்பயன்.....
அரவணைப்பை தேடித்தேடி
அன்பைத் தேடி தேடி
ஆதரவைத் தேடி தேடி
ஆவியாய் அலைகிறேன்....
காட்சிப் பொருளாகும் போது கண்கவர் வாழ்க்கை.....
ஒரு சாபம்
தீர இருவரம்..... எனக்கு
என் வாழ்க்கை தரம்......
ஒளியில் ஜொலிப்பவர்களுக்குத் திரியின் வலி எப்படி தெரியும்.......
காற்றை சுகிப்பவர்க்கு
மரத்தின் வலி எப்படி புரியும்
தனிமைப் படுத்தப்பட்டு
இளமை வருத்தப்பட்டு
முதுமை தலைகாட்ட
முடிகிறது பிறவி.....
விதி இரண்டெழுத்தில் முடிகிறது என்னுடைய வலி.....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114