கணவன்மார்கள் கைப்பக்குவம் கற்றுக்கொண்டால் கழிவுப்பொருள் நீ....
இலக்கணமாய் இருக்கவேண்டிய இல்லத்தரசிகளே தலைக்கனம் எதற்கு உங்களுக்கு....
ஊரடங்கிலும் அடங்காமல் உள்ளுக்குள் எரிந்து கொண்டு........
எதையாவது கிளறிக்கட்டி எல்லோரையும் வழியனுப்பி விட்டு........
எதற்கும் இயந்திரம் என்றாகிப் போக.....
துணி துவைக்கவும்
மாவு அரைக்கவும்
தொலைக்காட்சிப் பெட்டியோ தூங்கிக் கொண்டிருந்தவர்கள்.....
அலைக்கற்றை யோடு அலைபேசி தொடுதிரையில்
விழித்திரை பதித்து.....
எட்டு மணி நேரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள்.....
தின்று உறங்கிப் பெருத்து
வறுத்து கொண்டிருந்தவர்கள்....
ஊரடங்கில் உள்ளடங்கிக்கிடக்கும்
உறவுகளால்.......
பறிபோனது சுதந்திரம்.....
மூன்று வேளை உணவு
நொறுக்குத் தீனிகள்
இப்போதும் இருக்கிறது இயந்திரம் இயந்திரத்தை இயந்திரமாய்.....
சம் சாரத்தையும் சந்ததிகளையும் சந்தோஷப்படுத்த சம்பாதித்தவனை
சந்தோஷமாக வைத்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் இது.......
குடும்பத்தை குறையின்றி வைத்துக் கொள்வது கடமை அல்ல ஒரு வரம்......
சலித்துக் கொண்டும் சபித்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான்
கடைசிவரை பெண்கள்
அடிமையாய் நடத்தப்படுகிறார்கள் அவர்களின் செயல்களால்....
திருந்துங்கள்......
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114