இதமான மழை
மண்ணை மட்டுமல்ல
இதயத்தையும்
இதமாய் வருடியது......
மண் வாசனையோடு
என் யோசனையையும் கிளப்பி விட்டது .......
மரங்கள் குளித்தன
இலைகளின் கழிவுகள் இன்னமும் காலடியில்......
தலை துவட்டும் காற்று
தலை சிலுப்பும் இலைகள்
ஒதுங்கிய எனக்குள் உற்சாகம்........
மழை நின்றதும் பறந்தன பறவைகள் சிறகு உலற....
குப்பையை கூட்டினால்
போதுமா சாலையை கழுவிய மழைநீர்.....,
துப்புரவாளர் துணையின்றி
தொற்றுநோய் பரவாமல் இருக்க தொடர்ந்து தெளித்தது....மழை
மழை வந்து அழைத்தது மழலையை கப்பல் விட.....
இடி மின்னலோடு
இறங்கிய மழை.......
இளைப்பாறியது காவல்துறை......
நனைந்ததும்
அணைந்தது
விளக்கொளி........
மின் துண்டிப்பு.....
விளக்கேற்ற சொன்னதின் விவரம் புரிந்தது.......
இருட்டுக்கும் கொசுவுக்கும்
விஷம் வாங்கினேன்....
கொசுவுக்கு குளிர் எடுத்தது குடியேறியது வீட்டுக்குள்...
விலையில்லா குடிநீர்
விரைந்தன குடங்கள்
கூறைத்துவார குழாய்கள்....
கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டியது
அடை மழை........
தெளிவானது
வானமும் வதனமும்.....
வடிந்தது
மழையும் கண்ணீரும்......
நிறைந்தது மண்ணும் மனமும்.......
குறைந்தது தூசியும் துயரமும்.....
மழை வந்து அழைத்துச் சென்றது குப்பையாய் இருந்த என் குறைகளை குற்றங்களை......
நன்றி......
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114