காற்றும் மழையும் பறித்த
பூக்கள்.. காலடியில் சமர்ப்பணம் பூ மரம்....
களை பறிக்கிறது
தொற்று நோயும் தொடர்ந்த காற்றும்
உதிர்ந்த பழுத்த இலைகள்....
இரவில்
தவளைகளின்
பொதுக்கூட்டம்.....
சட்டத்தை மதிக்காமல்...
தெரித்த நீர்த்துளியில்
தெரிந்தது கொரோனா வடிவம்.......
மழை வந்து அழைத்தாலும் அழையாமல் வந்தது மனதில் பயம்......
தும்மினாலும் இருமினாலும் தூக்கிக் கொண்டு செல்வார்கள் கொரோனா பரிசோதிக்க........
சாளரத்தின் வழியே
சாரலை ரசிக்கிறேன்
தனிமைப்பட்டு கிடப்பதால்
இயற்கையே இயல்பாய் இருக்க விடு செயற்கையாய் சிரிக்கக் கூட முடியவில்லை
அழுவதும் சிரிப்பதும் அடி மனதிற்குள்ளே..,......
அடிபட்டதும் பிடிபட்டது வலி
நனைந்ததும் சிலிர்ப்பு
கண்ணீரும் மழையோடு காணமல் போகிறது.....
மழை நின்றவுடன் எல்லாம் தெளிகிறது......
வானம் விளையாட
ஊரடங்கில் அடங்காமல் ஊர்வலம் போனவர்கள் எல்லாம் ஊர்வலம் வந்த மழையால் உள்ளடங்கி வைத்தது
இயற்கை இயற்கை தான்
ஈடு இல்லை செயற்கை தான்
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114