இருக்கும் வரை கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறேன் நண்பா இன்று முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி.
எதுவரை என் கணக்கு எதற்கு இந்த பிணக்கு குதர்க்கமாய் தெரியலாம் உனக்கு பிறப்பும் இறப்பும் பிறவியின் வழக்கு...
உன்னைப் போல் என் மீது நம்பிக்கை வைக்க இன்னும் ஒருமுறை நீ பிறக்க வேண்டும்.. தன்னம்பிக்கையை விட
தலையாய் அது என் மீது நீ வைத்த நம்பிக்கை...
வீண் போகவில்லை அது நீ வான் புகுந்தாலும் மண்ணில் வாழும் என்னில் என்றும் நீ...
நான் மாண்டு போகும் வரை என்னை நீ ஆண்டு கொண்டு இருப்பாய்.. ஆண்டுகள் கடந்தாலும் நான் மாண்டு போகும் வரை...
உனக்கும் எனக்கும் தொப்புள் கொடி உறவு இல்லை...ஆனால் வந்த வழியும் வாழும் வழியும் போகும் வழியும் ஒன்றுதானே....
மூத்தவனாய் பிறந்ததாலோ என்னவோ முந்தி சென்று இடம் பிடித்தாய்.... வந்து தானே தீர வேண்டும் நானும் உன் வசம் ஒரு நாள்....
வரும்வரை வடித்துக் கொண்டிருக்கிறேன் கவிதையை
நீ படித்து கொண்டிருப்பாய் ஆத்மார்த்தமாக என்ற நம்பிக்கையோடு....
ஒருவன் வாழ்ந்ததற்கான அடையாளம் பணமோ பொருளோ அல்ல... அன்பும் பண்பும் மட்டுமே...
நீ வாழ்ந்து இருக்கிறாய் நான் வாழும் வரை எனக்குள்ளே....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114