உன்னை நீ உணர்கிறாய் என்றால் உனக்குள் நீ நிறைகிறாய் என்ற பொருள்.... உனக்குள் நீ நிறையும்போதே உன்னுடைய குறைகள் யாவும் மறைந்து போகும்
நிறைவடைந்தவர் வாழ்க்கையில் என்றும் நிம்மதி நிலையாகும்
நிம்மதி நிலைத்து விட்டால்
நின் மதி நிலைப்படும்...
மதிக்கும் மனசுக்கும் நடக்கும் போட்டியில்..மனசின் ஆசை மதியை மயக்கி வீழ்த்துகிறது..மதி ஒரு நிலைப்பாட்டில் மனம் இறை வழிபாட்டில்..
அலைபாயும் மனதை அடக்கி வைக்கும் மதி...மதியும் மனசும் தம்பதிகள்.... இரண்டும் நிலையானால் இல்லறம் சுகமாகும்
அறிவுக்குத் தெரியும் ஆசைப்படுவது
மனதின் இயல்பு ஆயினும் அடக்கியாள முயல்கிறது இறுதியில் அடங்கி போகிறது.....
அடங்கிப்போன மதி மனதின் ஆசையை நிறைவேற்ற துடிக்கிறது... நிறைவேற்றியும் விடுகிறது இறுதியில் மனசு அடுத்த ஆசை படுகிறது.....
ஈடுகட்ட நினைப்பது மதி இழந்ததை எண்ணி வாடுவது மனசு.. மனசை அடக்கி விட்டால் போதும் மதி சிந்திக்க துவங்கிவிடும்....
மனசுக்கு அறிவே இல்லை ஆசைக்கு அளவே இல்லை... அறிவுக்கும் ஆசை உண்டு.. தன் அறிவால் அறிந்ததை மட்டும் ஆசைப்படுவதுண்டு.....
மதியும் மனசும் தம்பதிகள்.... இதில் ஆண்பால் பெண்பால் யார் யார்
உடலும் உயிரும் பிரிந்தால் நீ யார்...
ஆசை அடக்கு அவயத்திற்குள் உன் ஆவி அடங்கும்.. பேராசை மட்டுமே இங்கு நிராசையாகும்... ஆசைப்படு தவறே இல்லை அறிவுக்கு உட்பட்டு ஆசைப்படு....
மதியை கொண்டு மனசை அடக்க முயல்கிறேன்.. விதியை வெல்லும் வித்தை அறிகிறேன்.. விதித்தது என்று ஏதுமில்லை நீ மதித்தது யாவும் உன்னை மிதிப்பதில்லை....
நம்மை நாமறிவோம் நமை நாமாள
நன்மை பல சூழ நமை நாம் வெல்ல
நம்மை நாமறிவோம் இம்மை சீராக...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114