என் சுகம் சுகவீனம் இரண்டையும் என் சுவாசக் காற்று வெளிப்படுத்தும்
என் பலம் பலவீனம் இரண்டையும் எனது பண்பு வெளிப்படுத்தும்...
ஆழ்ந்து சுவாசிக்கப்படும் காற்று அமைதியை நிலை நிறுத்தும்....
இழுத்து வெளிவிடும் சுவாசம் போதும் நம் இயல்பினை உணர்த்தும்..
முதலும் முடிவுமான நம்பிக்கை நம் மூச்சு காற்றை தவிர வேறென்ன.... சுவாசக் காற்று தடைபட்டு போக சுடுகாட்டு வசம் நம் வாசம்...
ஊடுருவும் காற்று இல்லை எனில் உடல் உறுப்பு இருந்தும் பயனில்லை
செயல் இழந்து போன பின்னே செயற்கை சுவாசம் வைத்து என்ன பயன் செத்த பிணத்திற்கு படையல் இடுவதைப் போல...
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குதென்றால் மேலுக்கு நமக்கு சுகம் இல்லை....
சுவாசமும் ஒரு வகை உந்து சக்தி.. முறையாய் சுவாசிக்க நீ அடைவாய் முக்தி....
இரு நாசி துவாரங்கள் நமக்கு இருக்கு... ஒரு நாசி உள்வாங்க ஒரு கணக்கு மறுநாசி வெளிவிட கூடும் ஆயுள் கணக்கு....
நவ துவாரம் இருந்தும் பயனில்லை இரு துவாரம் மட்டுமே உள்வாங்கும்...
வாய் வழி வாங்கும் காற்றினை நாசி வழி விட்டுப் பார் நாசி வழி வாங்கும் காற்றினை வாய் வழியை விட்டுப் பார்....
சுற்றி இருக்கும் காற்றை சுகமாக நீ ஆள பற்றி இருக்கும் உன்னோடு சுகமாய் நீ வாழ....
திறந்தே இருந்தாலும் செவிப்பறைகள் ஒலியைத் தவிர வேறு ஒன்றையும் விரும்புவதில்லை...
உன் மூச்சுக் காற்றும் பிறரை முடக்கக்கூடும்
உன் சுவாசம் போதும் பிறரை வசமும் ஆகும்
ஊடுருவும் காற்று போதும் உன்
உணர்வினை சொல்ல
உள்வாங்கும் எல்லாம் போதும் நீ உலகினை வெல்ல....
சுவாசப் பயிற்சி மேற்கொள்ளுங்கள் சுய முயற்சிக்கு துணையாகும்...
சுவாசம் அடக்க பழகுங்கள் சுரபிகள் யாவும் வசமாகும்..சுவாசத்தோடு சகவாசம் கொள்வோம்
சுகமே நாளும் நிலையாகும்
சுவாசக் காற்றை விட அதி முக்கியமானது சுதந்திர காற்று அதை சுவாசிப்போம் சூ...தந்திரம் தனை தகர்த்தே....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114