அப்பா அம்மா
இல்லாவிட்டால்
அனாதை அல்ல......
அன்பு அடங்கி விட்டாலே
அனாதை தான்........
உயிர் பிரிந்தால் தான் பிணமல்ல.....
உணர்வுகள் உறைந்தாலும்
பிணமே.......
கைக்கெட்டும் தூரத்தில்
எல்லாம் தள்ளிவைக்கப்பட்டு
தீண்டாமை தீயிலெறியும்
என் பாசம்.........எரிவது உண்மையென்றால்
எழும் புகை வேசமா...
குழந்தையும் தெய்வமும் ஒன்று பொய் பேசாது....
கேட்க்குமள்ளவா....
பொய்யென உணராமல்......
விடுமுறையின்
ஆரம்பத்தில் என்னை உணர்ந்து கொண்டேன்
முடிவில் உறவுகளை உணர்ந்து கொண்டேன்....
தனித்திருக்க பழக்கப்படுத்தி விட்டது.......,.
இறந்த பின்னே மிஞ்சுவது தனிமை அல்லவா......
பழகிக் கொள்கிறேன்
பாடை ஏறியபின்
பயன்படக்கூடும்......
உயிரைச் சுமந்தவளும் உடன் வரப்போவதில்லை
உதித்த உறவுகளும் உடன் வரப் போவதில்லை.......
நித்தமும்
நித்திரையில்
இமை மூடி தவம் இருக்கிறேன் இறுதி யாத்திரை உறுதியாக வேண்டி........
ஒவ்வொரு நாட்களாக
ஒவ்வொரு பக்கங்களை இணைத்துக் கொண்டு போகிறான்......
அந்தந்த பக்கங்களில் அவரவர் பங்குக்கு அனுபவங்களை எழுதுகின்றனர்........
வாசித்து உணர்ந்து வைத்துக்கொள்கிறேன் எனக்குள்ளே.......
அனுபவங்களால்.......
கடைசி நொடி கூட ஒரு அனுபவம்.......
பாலை ஊற்றுங்கள் பட்டென்று உயிர் போகும்.....
உறவுகள் ஊற்ற வந்த கடைசி பால் தொண்டைக்குள் சிக்கி மூச்சுத்திணறி........
நான் உயிர்த்தெழவா
உயிர் பிரியவா........
நினைத்து முடிப்பதற்குள் நித்திரை கொண்டது
என் சுவாசம்........
மூளை பதிப்பித்து கொண்ட கடைசி அனுபவம்
பாலும் வெள்ளைதான் விடமும் வெள்ளைதான்.....
ஊற்றும் உறவுகளை பொறுத்தே....... ஆயுள்..
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114