தேனீர் கடை இல்லை தேவையின்றி செலவு இல்லை.........
மதுக்கடையில்லை
சாக்கடையில் மனிதனில்லை.....
பயணங்கள் தடை வாகனங்கள் சயனம்
பயணப்படவில்வை
பயன்படவில்லை எரிபொருள்..........
உண்டோம்
உறங்கினோம்
உலக நடப்பை
உள்வாங்கினோம்.....
இருப்பு இளைத்தது எங்களோடு சேர்ந்து....
இறுமாப்பு தொலைந்தது இயலாமையின் போது....
நடைபயிற்சி இல்லாமலே
உடலிளைத்தது......
உழைக்காமலே உருவம்
உருக்குலைந்தது......
ஊரடங்கு நீடித்தால்
ஊரடங்கிப்போகும்
மண்ணுக்குள்.........
ஆயிரம் ரூபாயில்
அடக்கச்செலவு அடங்குமா....
மது அருந்தாமலே
பூமி சுற்றுது......
கால் நழுவியது......
கொரோனாவை
வென்றது பசி.....
என்னைக்கொன்று.....
நடுவண் அரசு சொன்னது
ஞாபகம் வந்தது
விளக்கேற்றினர்.......
ஒளிர்ந்த ஒளியில்
ஒவ்வொரு உயிரும்
உதிர்வது தெரிந்தது........
பால் தட்டுபாடு
வெள்ளை நிற
பூச்சிக்கொல்லி மருந்து
தொற்று தொற்றக்கூடாதாம்......
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114