எல்லாம் விட்டு ஓடும் ஒரு நாள் உயிருக்கு உயிராக என்ற உறவுகள் கூட மயிருக்கு இணையாக உதிர்ந்து போயிருக்கும்....
உதிர்ந்ததும் உணராமல் உறைந்து போய் இருப்பேன் நான்...
இமை இறுதியாக திரையிடப்பட்டிருக்கும்... எனக்கான இறுதி காட்சி மட்டுமல்ல எனது இறுதி காட்சியும் இதுவே
என் இறுதி காட்சிக்கு உறுதியுடன் வந்திருக்கும் அத்தனை உறவுகளும் அறுதியிட்டுச் சொல்லும்..
மிகுதி யற்று வாழ்ந்தான் இவன் என்றே ஆயினும் போதும் என்ற தகுதியோடு போனானிவன் என்றே
உதிர்ந்து போனவைகள் ஒன்றாய் இரண்டா பருவங்கள் உதிர்ந்து போனது... உருவம் சிதைந்து போனது
உணர்வுகள் மரத்து போனது.. உறவுகள் மறுத்து போனது
உண்மைகள் மறந்தும் போனது.. ஊமையாய் என் மனம் ஆனது..
யாதும் ஒன்றென உணர்ந்த பின்னே போதும் என்ற மனம் தன்னால் வரும்...
தீதும் நன்றும் சூழ்நிலை ஒன்றே
தீண்டித் திகட்ட மாறும் நன்றே
வேண்டும் அனைத்தும் பயனும் இல்லை... கல்லறைக் குழியில் இடமும் இல்லை...
பயணப்படுகிறேன் நான் பிறர் பயனுறும் வகையிலே.. சலனப்படுகிறேன் நான் சிலவற்றில் சஞ்சாரம் கொள்கையிலே...
மௌனம் கொள்கிறேன் நான் என்னுள் மயானத்தை உணர்கையிலே...
அரைஞான்கொடி கூட அறுத்து எறிய படுகையில்.. விஞ்ஞானம் வந்து என்ன வியாக்கியானம் செய்யும்...
மெய்ஞ்ஞானம் கூட உயிர் பொய் ஆகிப் போன பின் அஞ்ஞானம் ஒன்றே நிலையாகும்
அன்று அஞ்ஞானம் அறிவின் ஞானம்...அன்றாடம் சேர்ந்து தீர்ந்து கலையும் மேகம்... மோகம் போகம்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114