கவிஞன் யாவரும் இங்கு கஞ்சிக்கு வழியில்லாதவன் தான் கர்வத்திற்கு குறை இல்லை
படைப்பாளிகள் யாவரும் இங்கு பராரிகள் தான்
படைப்புகளின் பரிவாரங்களுக்கு குறைவில்லை
எண்ணங்கள் தானாய் தோன்றி விடும் எழுத்துக்கள் தேடி ஓடிவரும்
வரிசையாய் நின்று வார்த்தைகள் ஆகும்...
வாய் வழி வழிமொழிய இவன் வயிறு குளிர்ந்து போகும்... வயிற்றுக்கு உணவில்லாத போது செவிக்கு கொஞ்சம் ஈயப்படும்.....
இவனுக்கு இவனே படி அளந்து கொண்டிருக்கிறான்... எவனிடமும் பிடி சோறுக்கு கையேந்தாமல்...
ஊருக்கே பட்டு கொஞ்சம் ஆனாலும் வீட்டுக்குள் விளக்கமாறு தான்
வியாக்கியானம் பேசும் அத்தனை கவிஞர்களும்....
காந்தத்தின் இரு வேறு துருவங்கள் தான் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பது எவ்வளவு உண்மையாய் போகிறது... இல்லறம் எனும் நல்லறத்தில்....
என் படைப்புகளை நேசித்து வாசித்து சுவாசித்து நீங்கள் தரும் பட்டங்களை விட.... ஏதும் அறியாது என் பந்தங்கள் தரும் பட்டம் பைத்தியக்காரன் என்று
ரசனை உள்ளவன் வாழ்க்கையில் வெசனம் இருக்காது... வெசனப்பட்டுக் கொண்டே இருந்தால் நிதர்சனம் புரியாது
பொருளீட்ட வேண்டி நான் எழுதும் கவிதைகளில் பொருள் அற்றுப் போகிறது...
பொருளூன்றி படைக்கப்படும் கவிதைகள் பொருளீட்டாமல் போகிறது....
பணம் என்னும் பொருள் தேடி அலையும் இப்பூவுலகில்... மனம்
உணர குணம் மிளிர பொருளுரைக்கும் கவி படைக்கும்
குணம் கொண்ட கோமான்....
இறக்கும் தருவாயில் தான் உயில் எழுதி வைக்கிறான் அவனவன் படைப்பாளி இருக்கும் போதே உயில் எழுதி வைக்கிறான்....
வயிற்றில் காயும் ஈரத் துணியில் இருந்து வடியும் நீரின் வரிகளில்
எழுதுகிறேன் நானும்...
பசி என்பது எல்லோருக்கும் பொதுவானது ருசி மட்டும் அவரவருக்கு உரித்தானது....
கவிஞன் பசியும் அறிவதில்லை ருசியும் அறிவதில்லை... நசியும் நிலையிலும் இல்லை.. அவன் நசிவதே இல்லை காரணம் அவன் நற்றமிழின் பிள்ளை...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114