என்னை நினைக்கவே நேரமில்லாத உனக்கு என்னிடம் கதைக்க ஏதும் இருக்காது
என்னை மறந்துவிட்ட உனக்குள் மாற்றத்திற்கு குறைவேது
என்னை துறந்து விட்ட உனக்குள் துன்பத்திற்கு இடம் எது
மாற்றம் ஒன்றே மாறாதது ஆம் எத்தனை மாற்றங்கள் உனக்குள்
ஏமாற்றம் ஒன்றே நிலையானது ஆம் எத்தனை ஏமாற்றங்கள் எனக்குள்
கனவுகளாக விதைந்த உன் நினைவுகள் கண்ணீர் அறுவடை
கருவளையம் சிறை பிடித்தது என் கருவிழியில் நீ நிறைந்திருக்க
உனக்கு திருமணம் என்கிறாய்
திகைத்தது என் மனம்...
அழைப்பிதழை பார்த்தேன் என் அழகான காதல் அதில் அழுகையோடு
உன் திருமண வரவேற்பில் தெளிக்கப்படுவது பன்னீர் துளிகள் அல்ல என் கண்ணீர் துளிகள் ....
மறந்து துறந்து போன உனக்குள் நான் இறந்து போனவன் தானே
நான் இறந்து போகும் வரை எனக்குள் இருந்து கொண்டிருப்பாய் நீ. உடன்கட்டை ஏறும் உன் நினைவு என்னோடு... நான் மண்ணோடு...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114