மாறாத பசுமையாய்
நினைவுகள் மட்டும்.....
வறுமையிலும்
வளமையாக
உறக்கத்தின் போது வரும் கனவு.....
பிரிவினில் அழுதாலும்
இரவினில் சிரிக்கிறேன்
கனவில் அவள்...
சோற்றுக்கு வழி இல்லை
சொந்தம் எதுவும் இல்லை
இருட்டில் காணும் கலர் கனவுகள்
உடைந்து போன காதல்
இமைக்குள்ளே இல்லறம்
இமைக்காமல் நான்......
முகம் பார்த்த கண்ணாடி நான்
என் அகம் அவள் பார்க்கவில்லை...
சிரித்தால் சிரித்தேன்
அழுதால்
உடைந்தேன்.....
உடைபட்ட கண்ணாடி
அபசகுனம்
வீதிக்கு வந்தாலும்
பதிந்த அவள் முகத்தோடு....
யாருக்கும் புரியாத கவிதை
என் காதல்
நித்திரையில் வருவதானால்
நிரந்தர நித்திரையில் நான்.......
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114