உறங்குபவர் எழுப்பலாம்
உறைந்து போனவர்களை.....
விரும்பி வர அழைக்கலாம் விரும்பாதவர்களை......
திரும்பி வர அழைக்கலாம் திரும்பாதவர்களை......
செவிகளை தீண்டாமல் போகலாம் ஆனால் செல்களை.......
புதைந்த பிணத்தை எடுத்து
பரிசோதிக்க முடியும் பயன்படுத்த முடியாதென்று
பக்குவப்பட்டு விட்டாள்
புரியாமல் புலம்புகிறேன் நான்.....
எரிந்த பிணம் என் மண்டை ஓட்டை தேடுகிறேன்
தலை எழுத்திலாவது என்னவள் பெயர் இருக்கிறதா என்று.......
உன் உயிர் போனதும்
உண்மையானது என போல மட்டுமல்ல காதலும் தான்....
காற்றாய் வந்து உன் கார்குழலை கலைக்கிறேன்
நீராய் வந்து உன்னை நீராட்டி
நனைக்கிறேன் நீ என்னை நினைப்பாயா என்று......
உணவருந்தும் போதெல்லாம்
உனக்குள் புரை ஏற்றி
புதைந்து போன என் நினைவுகளை புதுப்பிக்க பார்க்கிறேன்.....
ஆயுள் பொழுதில் அரை நொடி கூட வா அன்பே என் நினைவில் இல்லை உனக்கு
ஆயுள் முழுதும் உன்னை எண்ணி ஆவியானவன் நான்..........
உறங்கிக் கொண்டே இரு ஒருநாள் மொத்தமாய் உறங்கும்போது இறங்கி வருவாய் மண்ணுக்குள்.....
உனக்காக காத்திருப்பேன்
உணராத என் காதலை நீ உணர வேண்டி.......
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114