எல்லாவற்றிற்கும் இடைவெளி
இறந்த பிணத்திற்கு
மட்டும் இல்லையே...,
பூவாய் பிறந்திருக்கலாம் ஒன்றாய் பூத்துக்குலுங்க
இலையாய் தரித்திருக்கலாம்
இணைந்து கிடக்க
அலையாய் அவதரித்து இருக்கலாம்
கரையை கட்டித் தழுவ....
காற்றாய் பிறந்திருக்கலாம்
வேற்றுமை பாராமல் நிறைந்திருப்பேன்
ஊற்று நீராய் பிறந்திருக்கலாம்
உலகெல்லாம் சுற்றி திரிய
மனிதனாய் பிறந்ததாலோ தனித்து தான் வாழ்கிறேன்...
கொரோனாவே
என்னை கொன்றுவிடு
மண்ணாவது என்னை அணைத்துக் கொள்ளட்டும்
பிரிந்திருந்து வாழ்வதைவிட பிணமாவது மேல்....
ஒதுங்கி ஒதுங்கி வாழ்வதைவிட
ஒன்றிணைந்து வாழ்கிறேன் மண்ணோடு மண்ணாக....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114