காட்சியின் குறைபாடல்ல காணுறும் பார்வை குறைபாடு கடக்கும் பாதை குளறுபாடு...
காட்சிப்பிழையல்ல காணும் பிழையே தான் வானம் பிழையல்ல கானகமழித்த நிலையே தான்
முற்றும் துறந்தவனுக்கு நிர்வாணம் என்பதும் ஒரு நிர்மூலமே வேறொன்றும் இல்லை..
தாய்ப்பால் நினைவிருந்தால் முறையற்ற முலை பால் தேடாது நிறைவுடன் தான் வாழ்ந்தால் குறையொன்று தோன்றாது
தாய்மையடையாமல் தாய்ப்பால் சுரக்காது..சேயை காணாது செங்குறுதி பாலாகாது.....
மரபியல் கூறுகள் இங்கே சதை பிண்டங்களாக... மனவியல் இழிவுகள் இங்கே உணர்வு சுரப்பிகள் ஆக....
புறத்தோற்றம் என்பது அறம் ஆகாது அகத்தோற்றம் காண தரம் மாறாது அகம் புறம் இரண்டும் வெற்றிடம் பற்றிடங்கொடா வரம் ஈடேது...
யாதும் கடந்த நிலையில் யாதும் ஒன்றே இங்கு... யாதும் துறந்த நிலையில் யாக்கையும் சுமையே இங்கு
ஆடையும் சுமையானது... வாடையும் துணையானது... அம்மணம் அறியாதது.. அவமானம் தெரியாதது
தீர்க்கமாக உற்று நோக்கி.. சின்னதாய் இதழ் சுளித்து வேகமாய் கடந்து போகும் மேகமாய் நானும் இங்கே...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114