உள்நாவை சுவைத்தவனை ஒருபோதும் மறக்காது......மகரந்த இழையதுவும் மரணம் வரை துறக்காது
தீண்டும் கணம் யாவும் தேகம் சிலிர்த்திடுமே..வேண்டும் கணம் மனம் தேடி அலைந்திடுமே
தேனூறும் இதழதனில் நாவும் நனைந்திடுமே
உமிழ்நீரும் சுரந்திடுமே உள்ளம் மகிழ்ந்திடுமே உதிரும் வரையினிலே உதிரம் மிகுந்திடுமே
சுவைத்த வண்டதனை சுகித்திட தேடிடுமே.. சுகந்த வாசம் பரப்பி நேசம் உணர்த்திடுமே .....
பேழையழகு காண் பேச்சற்றுப் போனதுவே மூழ்கி முத்தெடுக்க மூச்சிரைக்க வானதுவே
நாவின் சுவையதுவே நலிவுக்கு காரணமன்றோ.. தேடி நிதம் சுவைக்க தேகம் தீருமன்றோ....
காணா வேளையிலே கதறி துடிக்குமன்றோ... தொலைத்து விட்ட துயரால் இளைத்துப் போகுமன்றோ
ஆடி அடங்கும் வேளையிலே ஆற்றாமையில் குமுறுமன்றோ ஆவி அடங்கும் வரை பாவியென தூற்றி துவளுமன்றோ
இவண்
ஆற்காடு குமரன்
9789814114