Type Here to Get Search Results !

பிச்சைக்காரன்

பக்கத்து வீட்டுக்காரனை பழி தீர்க்க கொள்ளும் குரோதம் என் பதவியில் இருப்பவனை பழி தீர்க்க நினைப்பதில்லை.....

கீரைக்காரியிடம் பேரம் பேசுவதும் வணிக வளாகத்தில் வாய் மூடி கிடப்பதும் நாகரிகம் எனப்படுகிறது

லுங்கி விளம்பரம் திரையிடப்படும் திரையரங்கில் லுங்கி அணிந்து செல்ல தடை....

பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு அடி விட்டுக் கொடுக்க மறுக்கிறோம் ஆனால் இங்க அடுத்த நாட்டுக்காரன குடியேற அழைக்கிறோம்

எவனா இருந்தா எனக்கென்ன என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தால் போதும் அவனா திருந்துவான்... அவன் எவனா இருந்தாலும்

ஆயிரம் வழிமுறைகளை விதிமுறைகளாக வைத்து நமது கோரிக்கைகளை மறுக்கும் இந்த அரசு கோரும் வாக்குறுதியை மறுக்கும் உரிமை உனக்கு உண்டு....

பொய் சொல்லக்கூடாது என்று கற்பித்த ஆசிரியர் வாய் பிளந்தபடி அரசியல்வாதியின் வாக்குறுதி....கள் தரும் போதை

அரசு பணிக்கு வயது வரம்பு இருக்கிறதாம் அரசியல் பணிக்கு மட்டும் இல்லாமல் போனது எப்படி

கல்வி கட்டாயமாக்கப்படுகிறது அரசியல்வாதிக்கு மட்டும் கட்டப்பஞ்சாயத்து...

கல்வி அறிவில்லாதவன் நாட்டை ஆள்வதால் கேள்வி அறிவு இல்லாமல் போனது குடிமக்களுக்கு...

மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரும் இந்த அரசு கட்சி தாவல் சட்டத்தை கொண்டு வரலாமே...

தொண்டர்கள் இல்லாமல் கட்சிகள் தோன்றுவதில்லை... தொண்டர்கள் யாவரும் கட்சி மாறுவதில்லை

கட்சித் தலைவர்கள் யாவரும் கண்டவனுடன் சேராமல் இல்லை

எழுத்து வடிவில் கொள்கை எண்ணங்கள் யாவிலும் கொள்ளை

காணொளி கண்காணிப்பு பாதுகாப்பு வளையத்தில் நகரம்... கட்டவிழ்ந்து விடப்பட்ட போதையில் சிறார்கள் நரகம்....

உனக்கு வேண்டியவனை பார்த்து ஓட்டு போடாதடா... உனக்கு வேண்டியது என்ன நினைச்சு ஓட்டு போடு..,

உன்னில் மாற்றம் முன்னில் வரட்டும்

மண்ணில் மாற்றம் காலம் மாற்றும்

கூத்தாடி நாடோடி மட்டும் தான் தெருவுல கூத்தாடுவாங்க இது தேர்தல் காலம் அரசியல் கூத்தாடிகள் ஆட்டம் அரங்கேற்றம்

உதவித்தொகைக்கு இன்ன தகுதி வேண்டும் என்று சொல்லும் அரசு பதவிக்கு தகுதி வேண்டாமா சிந்தித்து வாக்களி...


பிச்சைக்காரனுக்கு போட்டியாக

தேர்தல் பரப்புரை..‌‌ கையில் திருவோடு இன்றி தெருவோடு

ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்கள் எவனையும் ஆதரிக்காத நாதாரிகள்

பிச்சைக்காரர்கள் சங்கத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

வாக்கு கேட்டு வரும் வாக்காளர் யாவரும்..

ஏர் ஓட்டுறான்.. கூட்டி பெருக்குறான் 

மீன் விக்கிறான்.. தோசை ஊத்துறேன்.. சர்பத்து விக்கிறான் சகலமும் செய்யுறான்....

நம்ம கூட நின்னு பிச்சை எடுக்க மட்டும் மறுக்கிறான்... நமக்கு போட்டியா இவனே நிக்கிறான்...

செல்லாத ஓட்டாகவே நாம் போடுவோம்.. நம்மோடு பிச்சை எடுக்க வராது இவனுக்கு நம் ஓட்டு எதற்கு...

யாசகனுக்கு இருக்கும் இந்த அறிவு இந்த யாத்திரிகனுக்கு இருக்கும் இந்த அறிவு... யாவர்க்கும் முளைத்தால் சரி.. அரசியல் மாற்றம் அழிவினை மாற்றும்...


இவண்

ஆற்காடு குமரன்

9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.