சூசகமாய் வாசகமாய் சூத்திரன் இவன் என்று சூனியம் வைக்கிறது.....
கலவுதலால் சிதைக்க வேண்டிய மதத்தை கல்வியில் ஏன் கலவுகிறீர்கள்...
கல்வி அறிவை விதைப்பதாக இருக்க வேண்டும் அடிமைப்படுத்துவதாக அமையக்கூடாது
பிள்ளைவாலுக்குள் எதற்கு பிரிவினை விதைக்கிறாய்
பிள்ளைகளை ஏன் பிண்டம் ஆக்கினாய்...
வர்ணனைகளை கூட விட்டு விடு எதார்த்தத்தை உணர வை..
எளிமையாய் எடுத்து உரைத்திடு வலிமை உணர்ந்திடும்....
வரலாற்றைக் கூட வழிமொழிய விரும்பாமல் தான் தொழிற்கல்வியை தேர்ந்தெடுத்தேன் நான்....
எல்லாம் திரட்டு புரட்டு வரலாற்றுகள் இங்கே.. திருட்டுத்தனமாய் தொகுக்கப்பட்டவை... தொடர்ந்து வழி வழியாக வழி மொழியப்பட்டவை
பாடநூல் தொகுப்பவன் யாவரும் பட்டயங்களுக்காகவும் பதக்கங்களுக்காகவும் பட்டறிவு இன்றி பாதகம் விளைவிக்கின்றான்
பாரபட்சம் பார்ப்பவன் பாவ புண்ணியம் பார்ப்பதில்லை
சாதகம் பார்ப்பவன்.. சாதகம் பார்ப்பவன் பாதகம் பார்ப்பதில்லை
பரிகாரம் இருக்கிறது அவனுக்கு உபகாரமாய்... பரிகாரம் இருக்கிறது இவனுக்கு அபராதமாய்...
வேத நூல்கள் வேற்றுமையை விதைக்கும் என்றால் பாட நூல்களில் வேத புராணங்கள் எதற்கு....
மனிதத் தன்மையற்றவன் மதம் படித்து என்ன செய்யப் போகிறான்
மனித உணர்வுகளை விட மகத்தானது மத உணர்வுகள் அல்ல
பாத்திரமறிந்து பிச்சை இடுகிறான் பக்தன்.... பித்தளை தட்டில் தட்சனை என்றும்...அலுமினியத் தட்டில் யாசகம் என்றும்....
உண்டியலில் இட்டால் காணிக்கையாம் ....உண்டிக்கு இட்டால் யாசகமாம்....
நாத்திகம் என்பது கடவுளுக்கு எதிரானது அல்ல
நடுவில் இருக்கும் இடைத் தரகனுக்கு எதிரானது.....
பட்டறிவின் பலன் தான் பகுத்தறிவு
பகுத்தறிவு பிரித்தறிதலே தவிர வேறு ஒன்றும் இல்லை....
இடைத்தரகன் இனியெதற்கு தடை கற்களாய் இனி நமக்கு....
பிஞ்சின் நெஞ்சில் நஞ்சை விதைக்காதீர்... பாடதிட்டம் எனும் பெயரில் வேதம் பரப்பாதீர்....
திணிப்பது எதுவும் இனிக்காது இனிப்பது என்றும் மறக்காது..,
கல்வித்துறையே கவனத்தில் கொள்
கலவி த்தரகு தவிர்... கல்வி உயிருக்கு நிகர்.....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114