வீதி எங்கிலும் கூவி விற்கப்படுகிறது....
கை நீட்டி முழக்கி
கை மாறுகிறது....
புலரும் வேளை மலரும் யாவும்
உளறும் நாளை சருகாய் மாறும்
கண் கவர் காட்சி கதம்பம் ஆகும்
கார்குழல் சூடிட கவிதையாகும்
சமத்துவம் என்பது மலர்களின் மகத்துவம்.... சத்தியம் அதிலும் உண்டு மருத்துவம்
பூக்களில் இங்கு எத்தனை ரகங்கள்.. பூவையர் சூடிட பெற்றது சுரங்கள்....
கசக்கி முகர வாசம் மாறும்
பூவும் பூவையும் ஒன்றே ஆகும்
வீசும் வாசம் வண்டிடம் பேசும்
வண்டினம் யாவும் உண்டிடக்கூடும்
மங்கையர் போலே மலர்களுமிங்கே
மகரந்தம் உண்டு மதிமயங்கிட கூடும்
சாதிமல்லி வீதியிலே... எல்லா சாதியிலும் கூடி சாதிக்குதே...
சாதி இல்லை என்றாலும் மணம் வீசி
சாதி மல்லி சாதிக்குதே...
இவள் கூந்தல் சேரா மலருண்டு
இறைவனடி சேரா மலர் இல்லை
இறுதி வரையில் மணமுண்டு...
உறுதியில்லை முகர்வேன் தானென்று.....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114