Type Here to Get Search Results !

ஆசிரியர் ஆளுமை

அரசியல்வாதிகளின் வழியே அரசு பள்ளி ஆசிரியர்களும் அடிமையாக...

உழைப்பு இல்லாத ஊதியம் உறுத்துகிறது
பிழைப்பு பிச்சை எடுப்பதாக தோன்றுகிறது

கரும்பலகை காட்சி பொருளாக
வகுப்பறை மயானமாக
சான்றோர்கள் சவமாக
ஆசிரியர்கள் அடக்கமாக
மாணவர்கள் ஆரவாரமாக....

பிள்ளைகளை பெயர் சொல்லி அழைக்கலாமா கூடாதா....
பின்னில் இதற்கும் சட்டம் வரும்

கொலு பொம்மைகளுக்கு இடையே தலையாட்டி பொம்மையாய் தலைமை ஆசிரியர்கள்.....

ஊன்றி நடக்கக் கூட கையில் கம்பு இருக்கக் கூடாது.. சட்டம் வந்தாலும் வரும்....

ஆசிரியர் பணி அறப்பணி என்பதெல்லாம் பொய் அடிமைப் பணி என்று ஆனது மெய்....

வகுப்பறைக்குள் வந்து விட்டேன் வாய் மூடி கிடக்கின்றேன்.....
சத்தம் எழுப்பும் மாணவர்களிடையே சவமாக நான்.....

அடக்க முயன்றால் அடக்குமுறை என முழங்கும்... அடிப்பதாக  பயமுறுத்தினாலும் சட்டம் வந்து கொல்லும்....

தண்டிக்கவும் கண்டிக்கவும் ஆளில்லை.... துண்டிக்கப்பட்டது ஒழுக்கம்... நல்லதை சொல்ல முதியோர் இல்லை சொல்ல முனைவோர்க்கு நாளும் தொல்லை

தந்தையின் கண்டிப்பை தடுக்கும் தாயின் முந்தானை... தாயின் கண்டிப்பை முடக்கும் தந்தையின் ஆணை... நீயா நானா என்ற போட்டியில் நிழல் தேடும் பிள்ளை

பொழுதைப் போக்குவது எப்படி என்பதில் பொறுப்பாய் திரிகிறது இன்றைய தலைமுறை....

அறிவொளி கொண்ட ஆசிரியர்களை அறிவிலியாக்கி.. அறிவைப் பெற வேண்டிய பிள்ளைகளை அடிமைகளாக்கி....

அரசியலின் சூழ்ச்சி இது..,. அறியாமையின் விளைவு நாளைய வீழ்ச்சி இது.... தற்குறி தலைமுறை
தலைவனுக்கு பொற்கிழியாகும்...

உழைப்பின்றி ஊதியம் பெறும் அரசியல்வாதிகள் வழியே ஆசிரியர்களும்....

செரிமானமாக மறுக்கிறது வருமானம் தரும் உணவு.....

கற்க கசடற கற்றபின் நிற்க அதற்குத் தக நிற்கிறேன் நான் நிற்கதியாக
கசடற கற்றதின் விளைவு கசக்கிறது
கற்பிக்க இயலாமல்... மேலும் கற்றிட முடியாமல்.....

ஆசிரியர்கள் ஆட்சியாளர்கள் முன்னே சிரியர்களாகவே....

இப்படியே நீடித்தால் போதும் குருகுல கல்வி வந்துவிடும்... கல்வி ஒரு குலத்திற்கு மட்டும் சொந்தம் என்று ஆகிவிடும்.....

அறிவே இல்லாத அடுத்த தலைமுறை அடிமைகளாகவே.... சிந்திக்க வேண்டும் என்றால் சிறிதளவாவது
நன்மை தீமைகளை சந்திக்க வேண்டும் சிறார்கள்....

சிந்திப்பீர் பெற்றோர்களே.....
உங்கள் பிள்ளைகள் தான் நாளைய தலைவர்கள்.... உங்கள் பிள்ளைகள் தான் நாளைய அறிஞர்கள்... எங்கள் பிள்ளைகளான உங்கள் பிள்ளைகள் தான் நாளை அறிவாளிகள்....

இவண்
ஆற்காடு குமரன்
9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.