கவிதை எழுத நினைக்கும் போதெல்லாம் விதையாய் வந்து புதைகிறது உன் பெயர் மட்டுமே.....
நூகரும் போதெல்லாம் நகர மறுக்கிறது என் பாதங்கள்.....
விழி வழி செவி வழி புகுந்து
மதியை வதைக்கிறது....
உச்சரிக்கும் வேளையில் நச்சரிக்கும் உன் நினைவு....
பெயரில் என்ன இருக்கிறது...உயிரில் கலந்து சிதைக்கிறது....
என் பெயரும் மறந்து போகும்
உன் பெயர்
உறைந்து போக
பெயர் பொருந்தி போனது இடம் பெயர்ந்து போனது
சிறுதுளி பெருவெள்ளம் உணர்ந்தேன் நான் நீ சிந்திய கண்ணீர் துளி காதல் பெருவெள்ளம்
அவதரித்த நேரம் உனக்கென வைத்த பெயர் என் ஆயுள் பொழுதை அபகரிக்கிறதே......
சாதகம் பார்த்து வைத்த பெயர்
உனக்கு சாதகமாகவே எனக்கு பாதகமாகவே.....
மறக்கவும் முடியவில்லை மறைக்கவும் முடியவில்லை
மறுக்கவும் முடியவில்லை....
உன்னில் மட்டுமல்ல உன் பெயரிலும் தொலைந்து போன நான்.....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114