இதய தினம் இன்று கொண்டாடப்படுகிறதாம்
என் இதயம் தினம் உன்னை கொண்டாடுகிறது....இன்று மட்டும் என்ன புதிதாக...
இரு விழிகளின் வழியே இதய பரிமாற்றம் இருந்தது நமக்குள்ளே...
இல்லம் மட்டும் என் இடம் மாற்றம் ஆனது....
இதயமே இல்லாத நீ எல்லாம் எப்படி இதயத்தினம் கொண்டாடுவாய் இதயமே...
இரக்கமே இல்லாத உனக்கெல்லாம் எப்படி உறக்கம் வருகிறது....
இயக்கமே இல்லாமல் இருக்கிறேன் என்ற தயக்கமே இல்லாமல் தவிர்க்கிறாய் நீ....
இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறது என்கிறார்கள்
எண்ணங்கள் நீயானதால் எண்ணிக்கையின்றி துடிக்கிறது என் இதயம் உன்னை எண்ணி.....
சுருங்கி விரியும் இதயத்திற்குள் வருந்தி வாழ்கிறது...நான் உன் மீது கொண்ட காதல்....
என் இதயம் துடிக்கும் வரை படிக்கும் உன் பெயரை
என் இரு விழிகள் இருக்கும் வரை வடிக்கும் கண்ணீரைத் துடிக்கும் இதயத்திற்கு ஏற்ப....
இதய தினமாம் இன்று... உனக்கு தெரிய வாய்ப்பில்லை இதயம் இல்லாதவள் தானே நீ....
உன்னை எண்ணி உனக்காக நான்
நீ ஆகவே.. நின்னில் தொலைந்த நான் மண்ணில் உன் நிழலாகவே...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114