என்னை வேண்டாம் என்று ஒதுக்கிய உன்னை வேண்டும் என்று மீண்டும் விழைகிறது என் மனசு.,...
தவிர்த்து விட்டு தவிக்கிறாய்.. நீ...
தவிர்த்ததனால் தவிக்கிறேன் நான்
போகும் பாதையில் உன் வாசம் பூரிப்பில் என் நேசம்...
கடந்த காலத்தை நினைத்து பார்ப்பதால் கடந்த தூரம் மறந்து போனது......
பாதை எங்கிலும் சுமை தாங்கி கற்கள்.... இறக்கி வைக்க மனம் இன்றி சுமக்கிறோம் நீயும் நானும்...
பயணப்படும் களைப்பு போக்க பயன்படுகிறது பழைய நினைவுகள்
நினைத்துப் பார்க்க நேரமில்லை என்பது பொய்... நினைத்து பார்க்காத நேரமே இல்லை என்பதே மெய்
இரு வேறு திசையில் நீயும் நானும் ஆனால் ஒரே நேர்கோட்டில்....
இரு வேறு துருவங்களாக நீயும் நானும்... காதலின் ஈர்ப்பு....
காதல் நினைவுகள் மட்டும் கல்வெட்டாக காயத்தின் வடுவாக
உப்பிட்டவரை உள்ளளவும் நினை உப்பு கரிக்கிறது உனக்கென நான் சிந்தும் கண்ணீரும்...
காதலின் நினைவுகளோடு காத்திருக்கிறேன் உனக்காக அல்ல
உன் மீது நான் கொண்ட காதலுக்காக
இவண்
ஆற்காடு குமரன்
9789814114