உடல் உயிர் பொருள் ஆவி மண்ணுக்கே...இது மனமுவந்து உரைப்பதல்ல.....
உடல் மண்ணுக்கு உயிர் விண்ணுக்கு எவனாவது உரைத்தால் கைதட்டி மகிழ்வோம் எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல்..
அவன் உயிர் மட்டுமல்ல எல்லா உயிரும் அப்படித்தான்... கைதட்டும் நமது உயிரையும் சேர்த்து....
உடன்பிறப்புகளே ரத்தத்தின் ரத்தங்களே... கூட்டத்தை பார்த்து அழைத்தவன் குடும்பத்தினருக்கு மட்டுமே பதவிகள்....
எல்லா சாதியின் கலவைதான் சட்டமன்றங்களில்... சாதி ஓட்டுக்காக வேண்டி சங்கமம் ஆனவை தான்....
செல்வாக்கு வேண்டும் செல்வாக்கு இல்லாதவன் சொல் வாக்கு நல்வாக்கு ஆயினும் செல்லுபடி ஆவதில்லை..
ஒரு படி மேலே போய் ஒருவன் சொல்வான் என் உயிர் தமிழுக்கு என்று.....
உயிர் பலி வாங்கி உயிர்த்தெழ உயிரற்றதல்ல என் மொழி... உயிரும் மெய்யும் ஒன்றிணைந்த மொழி உணர்வின் ஒலி....
மக்களுக்காக நான் மக்களில் நான் மக்களுக்குள் நான்.... எல்லாம் பொய்
உங்களுக்காக நான் உங்களில் நான் உங்களுக்குள் நான்.. இதுவும் பொய்
தனக்கான தேடலை பிறருக்குள் தேடுவதே கூடலும் கூட.. தேடியதில் தன்னை தொலைப்பதால் குழவியும்
நாட....
எவனும் எவனுக்காகவும் வாழ்வதில்லை அவன் அவன் தேவைக்காக நம்மை தேடி அலைகிறான்...
ஓட்டுப் பிச்சை கேட்டு வரும் எச்சை மீது இச்சை கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றுக்கும் பிச்சை எடுக்கிறோம் நாம்.....
கண்டதற்கெல்லாம் கை தட்டி
ஆரவாரம் வேண்டாம்... நாளை நம் ஆகாரத்திற்கும் ஆதாரத்திற்கும் கைதட்டி பிச்சை எடுக்க வேண்டி இருக்கும்....
இன்றைய தேவை சுய சிந்தனையே தவிர நிந்தனை அல்ல..வந்தனை அல்ல...
வஞ்சனை கொண்ட நெஞ்சனைத்தும் சிந்தனை செய்யட்டும் நமை இனி நிந்தனை செய்யவே......
இவண்
ஆற்காடு குமரன்
9789814114