விளம்பரம் கண்டேன் வியப்பில்லை வியாபாரம் ஆனது விருதுகளும் கூட
எருதுகளுக்காக.....
விலைப்பட்டியலோடு விருதுகள் பட்டியலும்... பட்டியில் அடைக்கப்பட்ட பலியாடுகள்...பட்டயங்களுக்கு
ஏங்கும் பராரிகள்....
தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் தகுதி கூட இல்லாமல் போய்விட்டது
தகுதி இருந்திருந்தால் மிகுதி ஆயிருக்காது ஊழல் கூட...
என்னை நான் அங்கீகரித்துக் கொள்வதால் அவநம்பிக்கை அகன்று.. தன்னம்பிக்கை
துளிர்க்கிறது.
தன்னம்பிக்கையும் தலைக்கு மேல் போனால் தலைக்கனம் ஆகிறத
தன்னடக்கம் மாய்கிறது..தன்னிலை இழக்கிறது...தலைவிரித்தாடுகிறது....
விருதுகள் எதற்காக.... விளங்கவில்லை பொதுவாக
விளம்பரம் அதற்காக...விளம்புமா அறம்...நிலையாக....
விருது வழங்கும் விழாவினால் வழங்கும் நிறுவனத்திற்கும் ஒரு விளம்பரம்... விருதுகள் மறைமுக வியாபாரம்....
விண்ணப்பிக்கும் முன் சிந்திப்பீர்
விருதுகளை தேடி விழைவது நம் படைப்பாக இருக்கட்டும்....
கேட்டுப் பெறுவதல்ல விருதுகள்... கேள்வியுற்று வருவது விருதுகள்....தேடிக் கிடைப்பதல்ல விருதுகள்.. நம்மை தேடி அடைவதே விருதுகள்.....
வணிகமயமாகிவிட்டால் வலிமை குறைந்துவிடும்... வலிமை குறைந்து விட்டால் எளிமை இல்லாமல் ஆகும்
எளிமை இல்லாத ஒன்று எப்படி எல்லோருக்கும் இங்கு வாய்க்கும்
எளிமை இல்லாத போது நேர்மை
எங்ஙணம் லயிக்கும்....
வாய்மை அற்ற இடத்தில் வாய்ப்பு நமக்கு எதற்கு... வாய் மெய் அற்ற பின்னே வாகை பொய் கணக்கு...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114