சனாதனம் என்றால் சமாதானம் என்று தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்....
மனுதர்ம சாத்திரம் இங்கு அவசியம் இல்லை மனித தர்மம் நிலை நாட்டப்பட வேண்டும்....
மனிதனை மனிதனாக மதிக்காத மதகுருமார்கள் இங்கு தேவையில்லை
சில மதங்களில் ஆள்சேர்ப்புக்காக மதப் பிரசங்கங்கள் நடக்கின்றன...
இந்த மதத்தில் மட்டும் தான் நாளுக்கு நாள் பிரச்சனைகள் உதிக்கின்றன
பிறவித் தொழில் என்று ஏதுமில்லை... அது குடும்பத் தொழில் தான்...
தொழில் என்பது பொதுவானது....
குலதெய்வத்துக்கு இல்லாத சக்தி எந்த மத தெய்வத்திற்கும் இருப்பதில்லை..
இந்த மதத்தில் மட்டும் கலவரங்கள் உண்டாக காரணம் ஒரு சமூகத்தைச் சார்ந்து மட்டும் இருக்க வேண்டும் என்பதே....
இந்த மதம் என்பது அனைத்து சமூகத்திற்கும் உரியது.. அர்ச்சனை பொருட்கள் கூட அனைத்து சாதியினரின் காணிக்கை....
அறியாமையை மூலதனமாக்கி
மூடநம்பிக்கையை விதைத்து தட்டேந்தி நிற்பது தன்மானத்தை குலைக்கவில்லையா...
சிலை வடிக்கவும் தெரியாது... சிமெண்ட் கலக்கவும் தெரியாது... செங்கல் சுமக்கவும் இயலாது... சொந்த வித்துவும் கிடையாது சொந்தம் கொண்டாடுவது எப்படி...?
ஊரார் சேர்ந்து கட்டிய ஆலயத்தை தனக்கு உடனே ஆக்கிக் கொள்ள பார்க்கிறது....
எவரோ வடித்த சிலைக்கு உருவேற்றுகிறேன் என்று உருட்டுகிறது....
உண்டியல் குலுக்கும் போது உறுத்தாத சாதி... உள்ளே வரும்போது மட்டும் உறுத்துகிறதோ...
ஆலயத்தின் தேவைக்கு அடுத்தவனிடம் கையேந்தும்போது எங்களின் தேவைக்கு ஆண்டவனிடம் கையேந்தினால் என்ன தவறு.....
கல்லை நம்பித்தான் ஆலயத்திற்குள் வருகிறோம் நாங்கள் கயவனை நம்பி அல்ல....
சன்னதிகள் உருவாக்கப்பட்டதற்கான காரணம் சமூக ஒருமைப்பாடு... மன அமைதி.. உணர்வு பூர்வமான ஒரு நம்பிக்கை....
இவ்வளவு விளக்கங்கள் உனக்கு தேவையில்லை இருந்தாலும்.. எங்களின் நம்பிக்கை விளங்கியதால் தானே.. நாளும் செழிக்கிறாய் நீ..
யாரும் எனக்கு விரோதிகள் அல்ல மூடநம்பிக்கை வியாதியை உணர்த்துகிறேன் நானும் முடமாகி போனதால்.....
சிந்திக்கட்டும் இனிவரும் இளைய சமுதாயம்.. விளங்கட்டும் யாவும் விலகட்டும் நாளும்....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114