ஊரார் பேச்சைக் கேட்டு உருவகப்படுத்திக் கொள்வோருக்கு
உணர்த்த சாட்சிகள் அவசியம் இங்கே...
ஊர் கதை பேசித்திரியும் உதவாக்கரைகள் இங்கே.. அவதூறு பரப்பும் நாளும் ஆக்கங்கள் ஏதும் இன்றி....
பிறர் குடியை கெடுத்து இவர்கள் பிச்சை எடுத்து வாழ்வார் நிதமும்
எச்சத்தின் மிச்சத்தையும் அச்சமின்றி கொள்வார்...
சுயநலத்தால் மறந்தே போகும் பொது நலத்தை சார்ந்தே வாழும்.. வீண் கதை பேசி பேசி விரயமாக கூடும் காலம்....
வீண் கதை பேசுவோர் கதை விவாதம் ஆக கூடும்... வீண் கதை பேசியதின் விளைவு மௌன விரதம் இருக்க கூடும்....
நக்கலும் நையாண்டியும் செய்வோர் நாளும் பிறர் காலை நக்கித்தான் பிழைப்பார்.....ஏளனம் செய்பவரும் கூட இறுதியில் பிறரை எதிர்பார்த்தே தான் நிற்பார்...
தீதகம் கொள்ளார் வாழ்வு பாதகம் ஏதும் இன்றி...சாதகமாய் நாளும் இங்கு சாந்தமாய் கடந்து செல்வார்...
ஊர் கதை இனியும் வேண்டாம் உன் கதை ஊர் பேசும்..
யார் கதையும் எதுவும் வேண்டாம் ஊர் போய் சேரும் யாக்கை.... உதிர்த்து விடாதே உந்தன் வாக்கை...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114